அமெரிக்க தேசி – நாவல்

Page

novel-t
அமெரிக்க தேசி என் முதல் தமிழ் நாவல். தமிழினி வெளியீடு. தொடர்பு எண்: +91-9344290920/+91-8667255103.

புற அங்கீகாரத்தைத் தேடி அமெரிக்க தேசம் ஏகிய ஒரு தேசி ஆங்கே அடைந்த அக மலர்ச்சி இந்நாவல்.

மேலும் அறிமுகம் என்றால், ஸ்ரீரங்கத்திலிருந்து அமெரிக்கப் பல்கலை ஒன்றில் பிஎச்டி ஆய்விற்கு செல்லும் மாணவனின் மூன்று வருட அமெரிக்க அனுபவங்கள், சார்ந்த சிந்தனைகள், சமத்காரங்கள், சமரசங்கள்… இறக்கம், பயணம், ஏற்றம் என்று மூன்று பாகங்களில். கதைக் களன் முழுவதும் அமெரிக்காவில். ஸ்ரீரங்கம், நினைவுகளில். மீதியை வாசித்து அனுபவியுங்கள்.


ஆன்லைன் ஆர்டர்: உடுமலை | என்.எச்.எம். ஷாப்


அமெரிக்கா, கனடா நாடுகளில் உங்கள் பிரதியைத் தருவிக்க மின்னஞ்சலில் என்னைத் தொடர்பு கொள்ளவும். Bank Transfer அல்லது PayPal அக்கௌண்ட் மூலம் கிரெடிட் கார்ட் உபயோகித்து வாங்குவதற்கான விபரங்கள் வழங்கப்படும்.


நாவலை வாசித்தவர் கருத்துகள்:

[இவர் சுஜாதா இல்லை. இவர் சுஜாதாவையெல்லாம் விட கூடுதலான ஆள். […] இவர் ரொம்பக் கூடுதலான உயரத்தைத் தொடுகிறார் […] இவரும் காற்றிலே ஏறி விண்ணைச் சாடுகிற மற்றொரு புரவியாகவே உருவாகியிருக்கிறார்.] (5:00)

[உயர்வான இடங்களுக்குப் படிப்பவர்களை தூக்கிக்கொண்டு போய் உட்காரவைத்துவிடவேண்டும் என்று எழுதுகிற பாங்கு ஜெயமோகனுக்குத்தான் கைவசப்பட்டது. ஜெயமோகனுக்கு அடுத்தபடியாக அது அருண் நரசிம்மனுக்கு கைவசப்படுகிறது] (24:00)

[கதை படிக்கிறோமா இல்லை காமம் படிக்கிறோமா இல்லை கடவுள் படிக்கிறோமா என்று… மூன்றையும் படிக்கும் அனுபவம் வேண்டுவோர்கள் இதைப் படியுங்கள்] (31:00)

[…ஒரு முக்கியமான படைப்பு. சிறப்பு என்றால், எழுத்துநடை. ஒவ்வொரு வாக்கியமும் வேகமாய் படித்துக்கொண்டு போக முடியாமல் திரும்பவும் வந்து வாசிக்க வைக்கும் எழுத்து. உள்ளுக்குள் சொல்லும் விஷயங்கள் ஏராளம். பல இடங்கள் அற்புதம். திரும்ப வாசிக்கவைப்பதாலேயே படித்து முடிக்க தாமதமானது.]

[அமெரிக்க தேசி கனமானதொரு காவியம். […] இந்தப் புதினத்தை உலுக்கினால், ஐந்தாறு சிறுகதைகள், இயல்பியல், கணிதம், கட்டிட வடிவமைப்பு, இத்தியாதி பொருள்கொண்ட கட்டுரைகள் ஏழெட்டு – எல்லாம் தேறும். பிறகும், நாவல் உருக்குலையாமல்.]

[… தத்தித் தாவும் தவளை நடையும் வளைந்து நெளிந்து கண்ணாமூச்சி காட்டும் பாம்பின் நடையும் கலந்து விரவி வர, சட்டென்று சிறகை விரித்தெழுந்து ஆகாயத்திலும் வளையவருகிறது இவரது எழுத்து.]

மேலும் விபரங்கள்:


உள்ளடக்கம்

அத்தியாயம் 1 – பகுதி 1