Whale வேல்

Standard

குசினியறையில் வேலையாய் இருந்த மனைவிக்கு உபயோகமாய் அவளை உற்சாகப்படுத்திக்கொண்டு நான் சும்மா இருந்துகொண்டிருந்தேன். அப்பொழுதுதான் ஒரு வேல் ஷார்க் (Whale Shark திமிங்கலம்) படத்தை யங் வேர்ல்டிலிருந்து கனகாரியமாய் வெட்டி மகளின் நோட்டுப்புத்தகத்தில் ஒட்டியிருந்தோம்.

அவள்: நா கடலுக்கு அடீல போப்போறே(ன்), வேல் ஷார்க ஃபோட்டோ பிடிக்க; நீ கிடயாது…

நான்: (கடுப்பாகி) ஓகே; நா பழனிக்கு போறேன் முருகர பாக்க; அவர்கிட்ட கூட ஒரு வேல் இருக்கு; அத பாத்துக்கறேன்…

அவள்: என்னோட வேல் ரொம்ப பெரிசு; உஒ முருகர் வேலோட பெரிசு தெர்மா…

நான்: முருகர் ஒம்மாச்சி. எப்பவேனா பெரிசாயிப்பார்; அப்போ அவர் கைல வச்சுருக்கர வேலும் ரொம்ப பெரிசாயிடும்…

அவள்: என் வேல் கடலுக்கு அடீல போகும்…

நான்: முருகர் விட்டெறிஞ்சா அவர் வேல் கூட கடலுக்கு அடீல போகும்

அவள்: என் வேல் கடலுக்கு அடீல ரொம்ப தூரம் போகும்; ஆஸ்ட்ரேலியாக்கலாம் போகும், இன்டியன் ஓஷன் வழியா…

நான்: (எங்கிருந்து இவள் இதல்லாம் தெரிஞ்சுக்கறா?) முருகர்க்கு ரொம்ப பலம்; அவர் வேகமா விட்டெறிஞ்சா, அவர் வேல் கூட கடலுக்கு அடீல ஆஸ்த்ரேலியா வரைக்கும் போகும்…

அவள்: (கடுப்பாகி கீச்சுக்குரலில்) என் வேல் மம்மல் (mammal), அதுக்கு குழந்தைலா பொறக்கும்…

நான்: !@#$%

கடைசியாக கேட்கையில் அவள் அம்மாவின் பெயிண்ட் ப்ரஷ்ஷையெல்லாம் விரட்டிக்கொண்டிருந்தாள் அவளுடன் கடலுக்கு அடியில் கூட்டிச்செல்வதற்காக,

“சமத்தா பேக்பாக்கில் உக்காந்துண்டு நனையாமல் வரணும், இல்லன்னா உங்க கலரெல்லாம் டைல்யூட் ஆயிடும், அம்மா அப்புறம் கோச்சுப்பா”

[பின்குறிப்பு: இதை சில மாதங்கள் முன்பே எழுதிவிட்டேன். தளத்தில் காணவில்லை. மறுபதிவு செய்திருக்கிறேன்]