அதைப் புரிந்துகொள்ளமுடியாத உங்கள் இயலாமையே அறிவியலுக்கு எதிரான செம்மையான வாதமாகிவிடாது.
[picture credit: Arunn, 2017 | Knots in a pillar of Melkot temple]
*
அறிவியல் சிந்தை என்பது பற்றி ஏற்கெனவே கற்க கசடற என்று ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். முன்வைத்துச் சில கருத்துகள்.
உதாரணமாக, குரங்கிலிருந்து மனிதன் பிறக்கவில்லை அதனால் டார்வின் தவறு அதனால் பரிணாமம் பற்றிய கருத்துகளைப் பள்ளியில் போதிக்கத் தேவையில்லை என்று சமீபத்தில் ஆட்சியில் இருக்கும் கட்சியின் அரசியல்வாதி ஒருவர் மேடையில் பேசினார். ஓரிரு தினங்களில் விபரம் புரிந்த அரசியல்வாதிகள் அவரை இவ்வாறு பேசுவதைத் தவிர்த்து அறிவியலை அறிவியலாளர்களிடம் விட்டுவிடுமாறு கருத்து தெரிவித்தனர்.
கமல்ஹாஸன் நடிகராக இருந்த அன்றே இதே போல் டார்வின் தியரி சந்தேகத்திற்குரியது என்றார். கேயாஸ் தியரியில் (எழுத்தாளார்) சுஜாதாவுடன் சேர்ந்து தானும் கரைகண்டதாய்க் கருத்து சொன்னார். அன்று அவர் கூறியதை மறுத்து கமல்ஹாஸன் வாயிலாக அறிவியல் என்று ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். (தொடர்பான அடுத்த கட்டுரை கேயாஸ் தியரியும் வண்ணத்திப்பூச்சி விளைவும் )
இன்று அரசியல்வாதியாகி உள்ளார். அன்றே இப்படி எந்த நிரூபணமோ தரவுகளோ தரத்தேவையின்றி தன் கருத்துகளை அள்ளிவிடுகிறாரே இவர் பின்னாளில் அரசியலில்(தான்) வலம் வருவார் என்பதை என்னால் ஊகிக்க முடிந்திருந்தால் அந்தக் கட்டுரையை எழுதியிருக்க மாட்டேன். என்ன செய்வது அறிவியல்காரனுக்குப் புத்தி மட்டு.
Continue reading