கடந்த சில நாட்களாக மேற்குத்தொடர்ச்சி மலைகளுக்கு இப்புறமும் அப்புறமுமாக இனிமையான பயணம். அவகாசமேற்படுத்தி ஓரிரு அனுபவக்குறிப்புகளையாவது எழுதிவைக்க வேண்டும்தான்… மாதிரிக்கு ஓர் இயற்கையோவியம் (ஹாஸனில் இருந்து தர்மஸ்தலா செல்லும் வழியில்).
தற்படம் எடுப்பதைத் தவிர்ப்பதால், (வரவிற்கும் அனைத்துப் படங்களுக்கும்) என் அமெச்சூர் கேமிரா காண்பவற்றினூடே தனித்திருக்கும் ‘மாடல்’ எனும் பெரும் பொறுப்பைப் பயணத்தொடக்கத்திலேயே தன் தலையில் ஏற்றுக்கொண்டுக் கடமையாய்க் கடைசிவரைச் செயல்படுத்தியவர் கவிஞர் மகுடேஸ்வரன் — அவர் இப்படத்துடன் வெளியிட்டுள்ள பதிவு.