அகத்திகம்

Aside

என்னை நம்புகிறாயா என்று மனைவி கேட்கிறாள். தக்க பதில் அளிக்கிறேன். அதையே தாய் கேட்கிறாள், தக்க பதில் அளிக்கிறேன். மனைவியை நம்புகிறாயா என்று தாய் வினவினால், அது உனக்கெதற்கு என்கிறேன்.

என்னை நம்புகிறாயா என்று மனிதன் கேட்கிறான். தக்க பதில் அளிக்கிறேன். அதையே இறைவன் கேட்கையில் தக்க பதில் அளித்துக்கொள்கிறேன். இறைவனை நம்புகிறாயா என்று மனிதன் வினவுகையில் அது உனக்கெதற்கு என்றே கூறுவேன்.