இல்புறம் — நாவல்

Page

ilpuram novel frontஇல்புறம் என்னுடைய மூன்றாவது தமிழ் நாவல்.

தமிழினி வெளியிட்டுள்ளது. விலை 690 ரூபாய். தமிழினியிடம் தொடர்பு கொண்டால் பெறலாம்.

தொடர்பு எண்கள்: +91-9344290920 | +91-8667255103
மின்னஞ்சல்: tamilinibooks AT gmail DOT com

ஆன்லைனில் வாங்க: இல்புறம் நாவல் — உடுமலை இணையதளப் பக்கம் | பனுவல் இணையதளப் பக்கம்

அல்லது உங்கள் ஊரில் புத்தக விழா நடக்கையில் அங்கு தமிழினி விரிக்கும் கடையில் கிடைக்கும். புத்தகக் கடைகளிலோ நூல்நிலையங்களிலோ தென்படாது.


இல்புறம் நான் உருவாக்கிய சொல். இல்லறம் என்பதற்கு எதிர்ப்பதம் இல்லை. புறத்தே ஒரு இல் என்று சுருக்கிவிடவும் வேண்டாம். மனது ஒவ்விச் செய்ய விரும்புவது அறம். மனங்கள் ஒவ்விப் பழகுவது இல்லறம். ஒவ்வா மனங்கள் நாடுவது இல்புறம். இவ்வாறுதான் நாவலின் பின்னட்டையில் விளக்கமளித்துள்ளேன்.

கதை என்ன என்றால்… நூற்றாண்டுகளாக இலக்கிய மையப்பொருளாக இயங்கிவரும் ஆண்-பெண் உறவுச் சிக்கல் சார்ந்த புனைவிழையே. சமகாலச் சூழலில் தமிழ் பேசும் நகர்ப்புற மத்தியதரக் குடும்பங்களின் வாயிலாகப் பரிசீலிக்கப்பட்டுள்ளது.

மைய இழைகள் இரண்டு மட்டும் சுருக்கமாக: இல்லறம் வழங்கும் ஒருவனுக்கு ஒருத்தி வகை ஆனந்தம் வரையறுப்பதால் வற்றிவிடுவதா. பன்னாட்டு மென்பணி நிறுவன மேலாளர் விவேக் ஆசைப்பட்டு மணந்த வாசுகியை நடுவயதில் விடுத்து அவள் தோழி விவிதாவை நாடியது இவ்வகையில். இந்தச் சமகால இல்புறத்தில் கோவலன் தண்டனை பெறுவது கண்ணகியிடமா மாதவியிடமா?

பள்ளித் தலைமை ஆசிரியை வைதேகிக்கு இல்லறம் அளித்திருக்க வேண்டிய ஆனந்தம் கணவன் ‘சாப்டுவேர் கூலி’ வருணிடம் வற்றிவிட்டதில் அவள் தன்னுடைய மாணவனிடம் இல்புறம் பழகலாமா. இந்தச் சமகால இல்புறத்தில் சபிக்கப்பட்டது அகலிகையா முனிவரா?


மற்ற மொழிகளைப் போலவே தமிழிலும் தீவிர இலக்கிய ஆர்வலர்கள் சிறுபான்மைக் குழுவே. இவர்களிடம் நான் சொல்லவேண்டியதில்லை. எப்படியும் வாசித்துவிடுவார்கள். என் புனைவெழுத்தை முந்தைய இரண்டு நாவல்களில் சந்தித்திராத புதிய வாசகர்களுக்கு முடிவெடுக்க உதவும் வகையில் நாவலின் ஒரு அத்தியாயம் சனவரி 2024 தமிழினி இணைய இதழில் இடம்பெற்றுள்ளது.


நாவலை வாசித்த பிறகு வாசகக் கருத்துகளை என்னுடன் பகிர்ந்தால் மகிழ்வேன்.


ilpuram novel wrapper அட்டை வடிவமைப்பு: அருண் நரசிம்மன்