தமிழ் இலக்கிய மரபின் அச்சுவார்ப்புகள்

Standard

பின்வருவனவற்றில் ‘|’ குறிக்கு இடப்புறம் அனைத்தும் ஒரு கட்சி, வலப்புறம் எதிர்க் கட்சி. கட்சிகள் எவை என்பதை இறுதி வரியில் விளக்கியுள்ளேன்.

தமிழ் எழுத்தாளனின் புனைவுலகில் தொடங்குவோம்.

ஏழை | பணக்காரன்
(இதன் வகையறா
வீட்டுவாசி | அடுக்ககவாசி
நடப்பவன் | காரில் செல்பவன்
பணியாள் | பணி கொடுத்தவன்
பாட்டாளி | பன்னாட்டு நிறுவன அதிகாரி
வேலையில்லாதவன் | மேலதிகாரி
பீச்சில் சுண்டல் விற்பவன் | அதை வாங்குபவன்
இன்ன பிற…)

கிராமத்தவன் | நகரத்தவன்
(இதன் வகையறா
வீட்டுவாசி | அடுக்ககவாசி
பீடி பிடிப்பவன் | சிகரெட் குடிப்பவன்
கள் அருந்துபவன் | மது அருந்துபவன்
சாராயக்கடைவாசி | பார்-வாசி
இட்டலி உண்பவன் | பீட்ஸா கடிப்பவன்
அலம்பிக்கொள்பவன் | துடைத்துக்கொள்பவன்
சட்டம் தெரியாதவன் | வக்கீல், போலீஸ்…
உழைப்பாளி | ஜமீந்தார்
ஆநிரை மேய்ப்பவன் | ஆடி கார் டீலர்
இயற்கை நேசி | மரங்களற்றவன்
சூழலியளாலன் | தொழிற்சாலையாளன்
விவசாயி | மற்ற அனைவரும்)

படிக்காதவன் | படித்தவன்
(இதன் வகையறா
கல்வி கற்காதவன் | கல்வி கற்றவன்
எளியவன் | புத்திசாலி
மனிதன் | புத்திசாலி மனிதன்
கிழக்கு ரங்கா சென்றவன் | காண்வன்ட் சென்றவன்
ஆறாம் வகுப்புத் தாண்டாதவன் | ஆசிரியர்
படிப்பைப் பாதியில் விட்டவன் | பேராசிரியர்
நாலு எழுத்துக் கோர்வையாக எழுத வராதவன் | ஆய்வுக்கட்டுரைகள் மட்டும் எழுதுபவன்
தாய்மொழியில் பேசத் தெரிந்தவன் | தாய்மொழி துறந்தவன்
கலைகள் படித்தவன் (பயின்றவன் அல்ல) | பொறியியல் படித்தவன் (பயின்றவன் அல்ல)
குலக் கலைகள் பயின்றவன் | கலாரசிகன் (எனப்படுபவன்)
இன்ன பிற…)

வேட்டி கட்டியவன் | பேண்ட் போட்டவன்
(பட்டாபட்டி அரையாடை | ஸ்வெட்-பேண்ட்
சோடாபுட்டி | காண்டாக்ட் லென்ஸ்
கடன் வாங்கியவன் | கிரெடிட் கார்டு உபயோகிப்பவன்
தாளில் எழுதுபவன் | கணினியில் எழுதுபவன்
உண்பவன் | மாமிசம் உண்ணாதவன்
குடிக்காதவன் | காபி குடிப்பவன்
இன்ன பிற…)

(மேலே உள்ளவை ஏழை பணக்காரன் அல்லது படித்தவன் படிக்காதவன் வகையறாக்கள் இல்லை, கவனிக்கவும்)

சேலை கட்டியவள் | பேண்ட் போட்டவள்
(இதன் வகையறா
இழுத்துப்போர்த்தியவள் | நாபிக்கமலம் காட்டுபவள்
இழுத்துப்போர்த்தியவள் | மார்பகப் பிளவுகளைக் காட்டுபவள்
எண்ணெய் தடவிப் பின்னல் போட்டவள் | பரட்டை பாப்-கட் வைத்திருப்பவள்
கண் மை பூசியவள் | வாய் மை பூசியவள்
பொட்டு வைத்தவள் | வைக்காதவள்
தாலி தொங்கவிட்டிருப்பவள் | மற்றவள்
இல்லாள் | வேலைக்குப் போகும் பெண்
பால்காரனோடு மட்டும் பேசுபவள் | ஆம்பிளைப்பாப்பாத்தி
ஆண் விரும்பும் பெண் | ஆணை விரும்பும் பெண்
கண்ணகி | மாதவி
கணவன் விரும்புகையில் மட்டும் உடலுறவிற்குச் சம்மதிப்பவள் | ஆபாசி, நிம்போமேனியாக், கலியுகி
நல்ல வேசி | குடும்பப் பெண்
குலமகள் ராதை | அழகி
செங்கமலம் | ரீட்டா
இன்னபிற…)

தந்தை | மகன்
தாய் | மகன்
தங்கை | மனைவி
வயோதிகர் | இளைஞன்
சம்சாரி | ஜாலி பேர்டு
காதலன் | கணவன்
தாய் | மாமியார்
தாய் | குழந்தையற்றவள்
தாய் | மணமாகாதவள்
தாய் | மாற்றாந்தாய்
தாய் | சித்தி
தாய் | மற்ற அனைவரும்

நட்பு | உறவு

கோவலன் | மற்ற அனைத்துச் சாதா ஜொள்ளர்களும்

தமிழ் மன்னன் | வேறு மன்னர்கள்
குறுநில மன்னன் | ஔரங்கசீப்
வந்தியத்தேவன் | நீலகேசி
மாமல்லன் | புலிகேசி

இந்த ஜாதிக்காரன் | பிற ஜாதிக்காரன்
(இதன் வகையறா
எம்மதத்தவனும் | அந்த ஒரு குறிப்பிட்ட மதத்தவன்
பகுத்தறிவாளன் | ஆத்திகவாதி
நலிந்த ஜாதி | ஆதிக்க ஜாதி
எழுதுபவனின் ஜாதி | பிறர்
போன்றவை)

தமிழன் | அயல்வாழ்த் தமிழன்
அயல்வாழ் இலங்கைத் தமிழன் | அயல்வாழ்த் தமிழன்
இலங்கைத் தமிழன் | மற்ற அனைவரும்
இந்த மாநிலத்தவன் | பிற மாநிலத்தவன்
இந்த தேசத்தவன் | பிற தேசத்தவன்
காங்கிரஸ்காரன் | பரங்கியன்
மாநிலக் கட்சிக்காரன் | காங்கிரஸ்காரன்
மக்கள் | அரசியல்வாதி

*

அடுத்ததாக, எழுத்தாளனின் அன்றாட (அக்கப்போர்) உலகில்…

எழுத்தாளன் | விமர்சகன்
விமர்சகன் | வசையாளன்
வசையாளன் | அடிவருடி
அடிவருடி | அல்லக்கை
அல்லக்கை | அடிப்பொடி
அடிப்பொடி | அல்லக்கை
அல்லக்கை | அடிவருடி
அடிவருடி | வசையாளன்
வசையாளன் | விமர்சகன்
விமர்சகன் | எழுத்தாளன்

எழுத்தாளன் | கவிஞன் (கவிஞன் கோணத்தில் மாற்றி வரும்)
தமிழ் எழுத்தாளன் | எழுத்தாளன்
வட்டார எழுத்தாளன் | தமிழ் எழுத்தாளன்
வட்டார எழுத்தாளன் | பிற வட்டார எழுத்தாளன்
கதை சொல்லி | எழுத்தாளன்
எழுத்தாளர் | பெண் எழுத்தாளர்கள்
இலக்கியவாதி | படைப்பாளி
(மாற்றிப்போட்டுக்கொள்ளலாம். யார் எந்தக் கட்சி என்பது என்றுமே எவருக்குமே புரியாது)

பிற மாவட்ட எழுத்தாளன் | திருச்சி, தஞ்சை எழுத்தாளன்
மாவட்ட எழுத்தாளன் | சென்னைவாழ் எழுத்தாளன்
வட்டாரச் சொல் வேந்தன் | வாங்கோ போங்கோ வந்தேறி
பிரஞ்சு லத்தீனமெரிக்க மொழி கலந்து தமிழில் எழுதுபவன் | ஆங்கிலம் வடமொழி கலந்து தமிழில் எழுதுபவன்

எழுத்தாளன் | விகடனில் எழுதுபவன்
எதைப்பற்றியும் எழுதுபவன் | விகடனில் எழுதுபவன்
புகழ் வெளிச்சத்தில் குருடானவன் | இருட்டிலே புன்னகைப்பவன்

அசோகமித்ரன் எழுத்தின் தீவிர வாசகர் எனும் எழுத்தாளர்கள் | ஏற்கெனவே வேறு பொய்களைச் சொல்லிவிட்டவர்கள்

*

இனி, வாசக உலகில்…

கருத்தாளன் | எதிர்க்கருத்தாளன்
கருத்தாளன் | மாற்றுக்கருத்தாளன்
கருத்தாளன் | சும்மா இருப்பவன்
சிந்தனாவாதி | மகிழ்ச்சியை வேண்டுபவன்

மௌனி | மர்ம யோகி
மலைக்கள்ளன் | மாமா பையன்
எம்.ஜி.ஆர். ரஜினி விஜய் தனுஷ் ரசிகன் | மற்றவர்

அலைபேசி உபயோகிப்பவன் | அதற்கு அடுத்த மதிபேசி (ஸ்மார்ட்போன்) உபயோகிப்பவன்
குறுஞ்செய்தியைத் தமிழில் வேண்டுபவன் | ஆங்கில எழுத்துருவில் தமிழ் எழுதுபவன்

*

இறுதியாக, இணையத்தில்…

கணினி அற்ற தமிழன் | தமிழ் ஆர்வலன்
தமிழ் ஆர்வலன் | ஆங்கிலத்தில் பேசி, எழுதாதவன்
ழ உச்சரிப்பு வராத தமிழன் | தமிழன்

வலைப்பூக்களில் எழுதுபவன் | டுவிட்டர் முகநூல் போன்ற சமூக வலைதளங்களில் எழுதுபவன்
வலைப்பூ ஆசிரியன் | பின்னூட்ட ஆசிரியன்
பரிசல்காரன் பிச்சைக்காரன் இத்யாதி | மற்ற அனைத்து ஃபேக்-ஐடிக்களில் எழுதுபவர்களும்
ஜெயமோகனின் மகாபாரதம் வாசிப்பவன் | மற்ற மகாபாரதங்கள் வாசிப்பவன்
இந்தியத் தத்துவ தரிசன ஆசான் | மற்ற அனைவரும்

*

இன்றைய இணைய எழுத்து சேர்த்து, கடந்த நூறு வருடத்திய தமிழ் இலக்கிய மரபில் கதாபாத்திரங்கள் உட்பட யார் நல்லவர் யார் கெட்டவர் என்பதையும், கதாபாத்திரங்கள் உட்பட எத்தகையோருக்கு இலக்கியப் பாங்கான மனித உணர்வுகளும் அவற்றை வெளிப்படுத்தும் திறனும் கைக்கூடும் எத்தகையோருக்கு அவை இப்பிறவியில் சாத்தியப்படவே முடியாது என்பதையும் கண்டுகொள்வது அத்தனை கடினமல்ல.