அமெரிக்க தேசி – வாசகி கடிதம்

Standard

novel-front-sஅமெரிக்க தேசி – விமர்சனம் இல்லை. படிக்கும் போது மனதில் (இடை விடாது) எழுந்த எண்ணங்கள்.

‘ரெங்கா மெட்ரிக்குலேஷனில் … குறைந்த மார்கினால் நல்ல வேலையாக இன்ஜினியரிங் கிடைக்காமல் …’ என்று snobbery யும் reverse snobbery யுமாக ஆரம்பிக்கும் the rebellious, apparently flippant (at times bordering on perversion), irreverent and sensitive தேசி இறுதியில் தாத்தாவிடம் புஷ்பவல்லி (தாயாருடன்) பேச சொல்வது சர்வ நிச்சயமாக லாஜிகலான நிகழ்வுகளின் தொகுப்பு.

தேசிகனின் அமெரிக்க வாழ்வின் பரிச்சயங்களின் teething issues ல் தொடங்கும் முன்முடிவுகள் — ‘இந்தியர்கள் கணிதத்தில் சிறந்தவர்கள். நீயும் அப்படிதானே’ (Janet S. Wong ன் Math என்ற “Asians are quiet / Asians like numbers / Mr. Chao can’t figure me out. / Me, I like to shout.” என்று துவங்கும் நான்கு வரி கவிதை நினைவு வந்தது.) தேசி மூலமாக உடைபட்டுக்கொண்டே இருந்தன. அதே சமயம் சாத்தமுதுடன் கணிதமும் தரும் அழகிய மணவாளன் – ‘லெட் மீ பை யூ லஞ்ச் டுடே … இல்லை வைத்து கொள். நாளை நீ கொடு.’ ஷொசேயும் பண்பானவர்தான். எனக்கு புரிகிறது. ஏனென்றால் நான் இன்னும் கொஞ்சம் முந்தைய தலைமுறையின் மிச்சம். ஆனால் நானும் வேலை செய்ய ஆரம்பித்த பின் கற்று இருக்கிறேன் – Let’s Dutch.

கொஞ்சம் சுய புராணம். என்னுடைய ஓரளவு தரமான ஆங்கில அறிவுக்கு காரணம் (உச்சரிப்புக்கு இலக்கணத்துக்கு) ஒரு கிராமத்து பஞ்சாயத்து பள்ளி ஆசிரியரும், ஏதோ ஒரு tier 3 பகுதியின் சுற்று வட்டாரத்தில் கிராமமும் இல்லாமல் நகரமும் இல்லாமல் இருக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியரும் என்றால் நம்ப மறுக்கிறார்கள். நான் சென்னையில் படித்ததால் வந்ததாம்.

சரி மறுபடி தேசியிடம். நீராகாரத்தை ஆ போட்டு குடித்து, வற்றலை எச்சில் படாமல் வாயில் அடித்துக்கொண்டு, இதுவும் புரிகிறது. நிறைய பிராமண ஸ்நேகிதர்களின் வீட்டுக்கு செல்லும்போது – அவர்கள் வீட்டு பெரியவர்கள் இருந்தால் – ஒரு குழப்பத்துடனே குடித்து சாப்பிட்டு வருவேன்.

தேசி அமெரிக்க வாசம் முழுதும் கண்டு களைவது, கண்டுகொள்வது நிறைய பாசாங்குகளை, அரசியல் சரிகளை. அரசியல் சரிகள் அதிகம் பேணாத பாவெயிலிடம்தான் நட்பும் சாத்தியப்படுகிறது. சதக் சதக் என்று குத்தும் கருப்பர்கள் பற்றி, படேல் ஸ்பாட்டுக்கு ஷேத்ராடனம் செய்யும், அவன் கண்ட அரங்கம் காணாத, அவர்கள் காணாத அமெரிக்காவை எதிர்பார்க்காத தேசிகளை பற்றி, வித் பல்ப் ட்ராபிகானா வுடன் பேச்சை தொடங்கியவுடன் தெரியவரும் பழைய குருடிகள் பற்றி, இந்திய தன்மையை எதிர்பார்க்கும் மரியா, லிசா, டாலி, ஷைலஜா, ஜென்சி, லெம்லெம் தாமஸ் (தேசி கன் = Indian gun = எப்பேர்பட்ட சொஷியாலாஜி மாணவி), மலர்விழி, kgb, capitalism, communism என்று வேறு பெயர்களில் அழைக்கப்படும் ஒரே இசங்கள் – hasty generalizations தகர்கின்றன சின்ன சின்ன உரையாடல்களில். தேசிகன் சூரியன் கீழ் உள்ள அனைத்தை பற்றியும் கருத்து வைத்திருக்கிறான் – அவன் வயது, பிரபஞ்சத்தின் மையமாக தன்னை கருதிக்கொள்ளும் வயது.

ஆனால் primitive needs என்று வரும் போது – ஆண்களை generalize செய்வது தவிர்க்க இயலாமல் போகிறது. என்னுடைய பார்வையும் ஒரு stereotypical attitude தான் போலும். இதில் வரும் பெரும்பாலான ஆண்கள் பெண் என்பவளின் உடல் தாண்டி வராமல் இருப்பதை, எந்த பெண்ணிடம் பேசினாலும் கொஞ்சமேனும் வக்கரம் கலந்த ரசிப்பும், ஈர்ப்பும், எள்ளலுமாக இருக்கும் ஆண்களை இயல்பாக எடுத்துக்கொள்ள முயன்றாலும், பெண்களின் gender ஐ பெரும்பாலான ஆண்களால் shed செய்ய முடிவது அவ்வளவு சீக்கிரம் நடக்காதோ என்று அலுத்து கொள்ள வைக்கிறது. வேறு எதனால் நந்திதா (பாதுகாப்பான) தேசிகன் தோள் தேடி கண்ணீர் வடிக்கிறாள். இந்த biological reflex இயல்போ, lesser evil என்று கடந்து செல்ல வேண்டிய விஷயமோ. இல்லை தவறு தவறு என்ற cultural conditioning இருக்கிறதோ. என் பெண் இயல்பாக கடந்து சென்று விடுவாளோ. ஆனால் நேர் பார்வை பார்த்து சகஜமாய் பேசும் பாபி ஜார்ஜும் இருக்கிறான்.

யாரும் அன்பு செலுத்துபவர்கள் என்றால் யார் மீதும் என்னாலும் அன்பு செலுத்த முடியும் என்பதும் உண்மையே. அன்பு அளிக்கப்படுகையில் அச்செயலை நிகழ்த்தும் மானுட உயிர்களையும் மாற்றியே தீரும். – நிஜம்.

நிறைவான முயற்சி. வாழ்த்துக்கள் அருண்.

மங்கை செல்வம்.
***

அமெரிக்க தேசி நாவல் விபரங்கள் | பதாகை நேர்முகம் | ஆறுமுகத் தமிழன் உரை | பாராட்டுக் கடிதம் | ஆன்லைனில் வாங்க