கர்நாடிகாவும் ஸ்ருதி பத்திரிகையும் சேர்ந்து நடத்தும் “சமர்ப்பணம்” இசை விழா எல்டாம்ஸ் ரோடில் உள்ள தத்வலோகா அரங்கில் (கல்யாண மண்டபம்?) பெருத்த ஆரவாரம் ஏதுமின்றி மிகுந்த ஏஸி குளிரில் இன்று துவங்கியது.
சமர்ப்பணம் இசை விழாவின் சிறப்பு இன்றைய முப்பது நாளில் முப்பத்தேழுகச்சேரி அவசர கதி இசை சீசனால் ஒதுக்கப்பட்டுவிட்ட ஆனால் அதனால் தங்கள் கலையில் சற்றும் ஒடுக்கமில்லாத ஒரு சில சங்கீத மேதைகளின் இசையை மீண்டும் ரசிகர்களின் மத்தியில் முழங்கவிட்டிருப்பது. என்னைப்போன்ற அரை நிஜாரில் காரில் உலவி செருப்புடன் ஏஸி ஆடிட்டோரியம் செல்பவர்கள் mp3யில் மட்டும் கேட்டுக்கொண்டிருந்த மணக்கால் ரெங்கராஜனின், எழுவதிற்குமேல் சென்றுவிட்டாலும் வயது சற்றும் தெரியாத உயிர்துடிப்பான இசையை, பிருகாவும் சதையுமாக கேட்கப்பெற்றது கர்நாடிகாவின் ராமநாதன் சௌம்யா மற்றும் சசிகிரனின் புண்ணியம்.
ஹம்சத்வனியில்சிறு ராக ஆலாபனைக்குப் பிறகு வந்ததுகருணை செய்வாய் கஜராஜ முகா; பாபனாசம் சிவனின் பாடல் என்று ராமதாஸ முத்திரையில் இருந்துகண்டுகொள்ளமுடிந்தது. பின்வந்த ஸ்வரங்களும் தீர்மானமும் வரப்போகும்பொக்கிஷங்களுக்கு முன்னுதாரணமாக அமைந்தது.
ரீதிகௌளைஆலாபனை ரெங்கராஜனின் பேஸ் (bass) குரலின் மகத்துவத்தைஉணர்த்தியது. ஒருசில அபாரமான பிடிகளுடன் ஆனந்தபைரவியெல்லாம் துளியும்எட்டிப்பார்க்காத அழகான ஆலாபனை. சௌம்யா உட்பட எல்லோரிடமும் உடனே அப்ளாஸ்வாங்கியது. ஸ்வாதித்திருநாளின்பரிபாலயமாம்கீர்த்தனைக்குப்பின் சப்மெயினாகமோஹனகல்யாணிஆலாபனை துவங்கியது.
பாடகருக்கு அநாயாஸமாக வந்த ராக பிடிகளும் விரித்துரைப்பதற்கானஐடியாக்களும் பிடில்வித்துவானுக்கு இன்று இந்த ராகத்தில் வரவில்லைஎன்றுதான் சொல்லவேண்டும். சுருக்கமாக in search of the melody. அதனால்நிதிசால சுகமாவிலிருந்து (கல்யாணி) சேவே ஸ்ரீகாந்தம் வரை இருக்கும்மெலடியை எல்லாம் அழகாக வாசித்தார். நன்றாகவே இருந்தது.சிவம் விஷபாருண்டம்என்று கண்டசாபுவில் முத்தையாபாகவதர் கீர்த்தனை நான் கேட்டிராதது.கண்டசாபுவை கண்டு அஞ்சாத, ‘கண்ட‘ கதியில் குதிக்காத, கணக்கான நிரவல்.சாமவேதப்ரியம் என்று தொடங்கி சங்கீத சரமாக வந்தது. ராமபத்திரனின் கணகணகாலப்பிரமாணத்தில் கலகலவென்று கிளர்ந்தது. சிறுவயதில் இந்த சிம்மம் எப்படிமுழங்கியிருக்கும் என்று நம்மை சிலாகிக்கச் செய்தது. நிரவலில் நிழல்போல்தொடர்ந்த சந்திரசேகரன் பிறகு வாழ்த்திப்பேசுகையில் “சிறு வயதில் பொறிபறக்கும்” என்று எனக்கு பதிலளிப்பதுபோல் நினைவுகூர்ந்த்தார்.
அடுத்து வந்தது ஆரபியா என்று என் போன்ற கத்துகுட்டிகள் இன்றும் குழம்பும்தேவகாந்தாரிஆலாபனை. எதுவாக இருந்தால் என்ன இரண்டையுமே இப்போது சீசனில் வேறு இடத்தில் கேட்கமுடியுமா என்பது சந்தேகமே. கீர்த்தனைக்ஷீரஸாகரஸயனா. பாடியவிதம் வெகு அபாரம். பழைய நாட்களில் ஒரு கீர்த்தனையை ஏன் பலவருடகங்கள் பாடி பயின்ற பிறகே மேடையேற்றி இருக்கிறார்கள் என்று நிதர்ஸனமாகபுரிந்தது. பத்து மணிநேரத்தில் ஃபாஸ்ட் ஃபுட் பாட்டாக கீர்த்தனைகளைகத்திக்கொண்டு மேடையேருபவர்களும் கவனிப்பார்களாக.
இத்தனை சுகமாக சயனித்தபிறகு மனசு இனி எதை கேட்க முடியும் என்று எண்ணிக்கொண்டிருக்கையில் வந்தது ஒரு googly. ரகுவம்சசுதாம்புதிஎன்றுகதனகுதூஹலமாக. சற்று வேகமாக துவங்கியது மிதவேகம் பிடித்து ப்ருஹாக்களை அள்ளிவீசிக்கொண்டு பயணித்தது. ராமபத்திரனா கொக்கா. அருமையாக அனுமானித்தார்ப்ருஹாக்களை. எனினும் அடக்கியே வாசித்தார். பிறகு வாழ்த்திப்பேசுகையில்அறுபதுகளில் பயந்தது போலவே இன்றும் பயந்தே, பிரமித்தே, வாசித்தேன்பாடகரின் இந்த கீர்த்தனைக்கு என்றார். கேரளாவில் பாடகருடன் 1960ல் கச்சேரிசெய்த அனுபவங்களை நினைவுகூர்ந்த்தார்.
விட்டாரா மணக்கால். அடுத்து வந்ததுகுந்தலவராளிஆலாபனை. சந்திரசேகரன் அருமையாக சற்றே காவடிச்சிந்து பாணியில் பிடிலில் பதிலளித்தார்.சரசரசமரேஎன்றுஉற்சாகமாக விரட்டினார் எழுவதைத்தாண்டிய இளைஞர். நடுவில் ஆதியில் த்ரிஸ்ரநடையில் சிட்டை ஸ்வரம் வேறு. ஸ ஸ மா ம ஸ என்று இழுக்கையில் ராமரின்கோதண்டம் சமருக்கு நாணேருவது ஒலியில் கேட்டது. கண்முன் வந்தது.
அடுத்து வந்தது ரெங்கராஜனின் மாஸ்டர்பீஸ்.காம்போதி. மெயின் உருப்படி.
ஆலாபனை ஆரம்பித்ததுமே கண்டுபிடித்துவிடலாம். ஒவ்வொரு ஸஞ்சாரமும்விஸ்தாரமாக நீட்டி முழக்கி நுணுக்கமான பிடிகளுடன் வரும். ஸ ரி க, ரி க ம, என்று வார்த்தை வார்த்தையாக பிய்த்துப் பாடாமல், முழு வாக்கியமாக பாடுவது.மைக் இல்லாத நன்மைக்காலத்தின் பாடும் முறை. ரெங்கராஜனின் காம்போதியிலும் தெரிந்தமுறை.
சற்று காதை மூடிக்கொண்டு கேட்டால் மைக்கில் கேட்க்காத குரலின்ரம்மியமும் ஒரு சில சூக்ஷமங்களும் கேட்டது. அடுத்தமுறை கச்சேரியில் ட்ரைபண்ணுங்கள். வெறும் கணக்குகளாக இல்லாமல் எல்லா ராக ஆலாபனைஐடியாக்களுக்கும் வாக்கியத்தின் முடிவில் அழகாக ஒரு முத்தாய்ப்புவைக்கிறார் பாடகர். மனதினுள் ஒரு கண்டின்யூட்டி இருக்கிறது இவ்வகை இசையைகேட்கையில்.
சந்திரசேகரன் காம்போதியை அருமையாக வாசித்தார். பாடகரிடமிருந்து inspiration போலும்.
கீர்த்தனம் தீக்ஷதரின்ஸ்ரீ சுப்பிரமணியய நமஸ்தே. பாடகர்விரித்துரைத்ததும் மனதினுள் கேள்விகள். எங்கு சென்றன இந்தசங்கதிகளெல்லாம்? வாசவாதி சகல என்று தொடங்கி மீண்டும் ஒரு அநாயாச நிரவல்பகுதி. கமபாமகா ரிகஸாரிகா என்று பழகிய மெலடியை பிரித்து பிரித்துஉபயோகிப்பதும், பத பத ஸரிக.. வாசவாதி என்று அழகாக முடிப்பதுமாக பிளந்துகட்டினார் ஸ்வரங்களில். தீர்மானம் இல்லாமலே முடித்து தனி விட்டார்.
ஏழுநிமிடத்தில் தனியில் சொல்லமுடியாததை ஒரு போதும் சொல்ல முடியாதுஎன்பது ராமபத்திரனின் கருத்தாம். கச்சிதமாக நிரம்பிய தொப்பி சகிதம்வாசித்தார். பாடகர் மறக்காமல் சரணத்தைப் பாடி முடித்தார்.
அரங்கம் நிறைய அப்ளாஸ். என்னையும் சேர்த்து, இருந்த இருபது பேரிடமிருந்து.
இருந்தால் என்ன. சேஷகோபாலன் சொல்வதுபோல வைரக்கடையில் கூட்டம் எதற்கு?
மாண்டுவிலு்ம் (கார்திகை பாலனை) காப்பியிலும் (கந்தவேல் அவனை)அவர் அண்ணா மணக்கால் வரதராஜன் இயற்றிய இரண்டு பாடல்களை படிவிட்டுஸ்ரீராமசந்திரனுக்கு மத்தியமாவதியில் ஜெய மங்களம் பாடி முடித்தார்மணக்கால் ஸ்ரீ ரெங்கராஜன். மூன்று மணிநேரம் சென்றது தெரியவில்லை.
நடுவில் அவரை பாராட்டி கர்நாடிகா சார்ப்பில் ஒரு CD வெளியிட்டார்கள்.அதற்கான நன்றி ஏற்புரையை ரெங்கராஜனின் மகன் ஆனந்தபைரவியில் extempore பாட்டாக பாடி அசத்தினார். ரெங்கராஜன் அவர்கள் வீட்டில் பேச்சே கிடையாதுபோலும்.
பாராட்டிய ஸ்ரீ சுந்தரம் வார்த்தைகளில், மணக்கால் ரெங்கராஜனின் இசையைரசித்து ‘பேஷ்‘ என்று சொல்ல எனக்கு அருகதை கிடையாது. என்னால் முடிந்தது “ஆஹா”.
(மெயின் காம்போதியாக இருந்தாலும் அதை அமர்க்களமாகபாடியமையாலும், ஏனைய உருப்படிகளிலும் சாபு மற்றும் ரூபகத்தில் சற்றே மறந்துவிட்ட கீர்த்தனை பொக்கிஷங்களை பாடியமையாலும் தொய்வை குறைவாக கூறப்பட்டுள்ளது. என் மேல் பாய்வதற்கு முன் தொய்வை அளவை கட்டுரையைமுதலில் படித்துவிடுங்கள்)
———–
SAMARPANA Series organized by Carnatica at Tattvaloka auditorium, Eldams Road
Dec 1, 2006. 6:30 PM – 9:30 PM
Vocal – Manakkal Rengarajan
(support vocal – Padmavathi Rengarajan)
Violin – M. C. Chandrasekaran
Mridangam – Vellore Ramabadran
Kutchery Dullness Index: 30