நிறமற்ற வானவில் என்கிற தலைப்பில் என்னுடைய அறிவியல் சார்ந்த சில கட்டுரைகளை தமிழினி நூலாக வெளியிட்டுள்ளது. விலை 200 ரூபாய்.
இது தமிழினி வெளியிடும் என்னுடைய நான்காவது அறிவியல் சார்ந்த நூல். முன்னர் பிரசுரமான மூன்று அறிவியல் நூல்களும் இந்த ஆண்டு மறுபதிப்பு கண்டிருக்கிறது. அனைத்தும் நடந்துவரும் 2024 சென்னை புத்தக விழாவில் தமிழினி கடையில் கிடைக்கும். பிறகும் தமிழினி-யிடம் தொடர்புகொண்டால் கிடைக்கும்.
நூலின் பின்னட்டை விளம்பர வரிகள்: பள்ளி கல்லூரிகளில் தேர்வு விழுக்காடு நல்ல வேலை என்று ஏதோ ஒரு முடிவை நோக்கி அவசரகதியில் பரிமாறிக்கொள்ளப்படும் அறிவியில் சார்ந்த விஷயங்களை பாடம் என்று தெரியாமல் சற்று நகைச்சுவையுடன் வரலாற்று விஸ்தாரத்தில் சாய்வு நாற்காலியில் இருந்து புரட்டினால் எப்படி இருக்கும் என்கிற உந்துதலின் வெளிப்பாடே இப்புத்தகத்தில் தொகுக்கப்பட்டிருக்கும் கட்டுரைகளின் நோக்கம்.
ஓரிரு கருத்துக் கட்டுரைகளும் பொது அறிவியல் இயற்பியல் உயிரியல் என்று வழக்கமான வகைகளில் சில கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன என்றாலும் இந்நூலில் கணிதம் சார்ந்த எளிய விளக்கங்கள் கொண்ட மூன்று கட்டுரைகளை அமைக்க முடிந்தது ஒரு நல்ல தொடக்கம். அடுத்த ஆண்டுகளில் ‘பூச்சி பூச்சி’யாகச் சமன்பாடுகளுடன் முழுவதும் கணிதம் சார்ந்த எளிய விளக்க நூல்களைத் தமிழில் எழுதி வெளியிட முடியலாம். பார்ப்போம்.
தமிழில் அறிவியல் நூல்கள் விற்காது என்று கருதும் பதிப்பாசிரியரும் விற்கும் என்று கருதும் பதிப்பாசிரியரும் உண்மையே சொல்கின்றனர் என்று ஏற்கெனவே எழுதியிருந்தேன். தமிழில் எழுதப்படும் அறிவியல் நூல்களின் விற்பனை இன்றும் இந்த இரட்டுறமொழிதலின் இடைவெளியிலேயே நடக்கிறது. இனியும் அவ்வாறே என்று தோன்றுகிறது.
நூலை வாங்கி வாசித்தபிறகு தொடர்பான கருத்துகளை என்னுடன் பகிர்ந்தால் மகிழ்வேன்.
*
நிறமற்ற வானவில் நூலின் உள்ளடக்கம்
(தலைப்புக் கட்டுரை நீங்கலாக அனைத்து கட்டுரைகளின் முன்வடிவமும் இந்த வலைதளத்தில் பதிவுகளாக உள்ளன)
1. அன்றாட அறிவியல் சிந்தை
2. பேய் பிசாசுக்களும் பேயஸ் தியரமும்
3. கட்டடங்களும் கோபுரங்களும்
4. தொழிலறம்
5. இடவியலும் வடைவியலும்
6. கோனிங்ஸ்பெர்கின் ஏழு பாலங்களும் வரைகோலங்களும்
7. மாவு மிஷினும் மோபியஸ் பட்டையும்
8. 42 என்கிற விடையின் ஆகச்சிறந்த வினா
9. மகுடி இசையும் பாம்புச் செவியும்
10. பூனை குறுக்கிட்டால் மேக்னெட்டோரிஸப்ஷன்
11. டூகேன் பறவை அலகினால் ஆன பயன்
12. நிறமற்ற வானவில்
13. நூலறிவு
14. மாநகர் (சு)வாசம்
15. அழைப்பும் பிழைப்பும்
*

அட்டை வடிவமைப்பு: அருண் நரசிம்மன்
*