டுவிட்டரில் அறிவியல் எழுத முடியுமா — விவாதிக்க முடியுமா அல்ல, எழுத முடியுமா — என்று 2009-2010இல் ஆங்கிலத்தில் முயன்று பார்த்துள்ளேன். தமிழிலும் முடியும்.
இவ்வாறு
நிலையான எவ்வேகமும் ஓய்வே தடைபடும்வரை. நாயின் வள் விசையே ஓடும் நிறையின் முடுக்கமாகும். அது உனைத் தொடாமல் நீ அதைத் தொட முடியாது. #NewtonsLaws
— அருண் நரசிம்மன் (@srirangamarunn) June 30, 2016
மனிதனுக்குக் காணல் எனும் செயல் சாத்தியப்படும் அண்டங்களில் காண்பதற்கு ஆயிரம் கோடிச் சூரியன்கள் இருந்தே தீரும் #AnthropicPrinciple #NotPhysics
— அருண் நரசிம்மன் (@srirangamarunn) June 30, 2016
இதைப்போல இயற்பியல் (வளர்ந்த) கதை — story of physics — முழுவதையும் தொடர் டுவிட்டர் வாக்கியங்களாய்த் தமிழில் எழுதிவைத்துள்ளேன்.