எட்டணாவில் உலக ஞானம் – சிறுகதைகள்

Page

ettanavil ulagta gnanam front‘எட்டணாவில் உலக ஞானம்’ என்கிற தலைப்பில் என்னுடைய சிறுகதைகள் சிலவற்றைப் புத்தகமாக தமிழினி வெளியிட்டுள்ளது.

விலை 200 ரூபாய். தமிழினியிடம் தொடர்பு கொண்டால் பெறலாம்.

தொடர்பு எண்கள்: +91-9344290920 | +91-8667255103
மின்னஞ்சல்: tamilinibooks AT gmail DOT com

ஆன்லைனில் வாங்க: இல்புறம் நாவல் — உடுமலை இணையதளப் பக்கம் | பனுவல் இணையதளப் பக்கம்

அல்லது உங்கள் ஊரில் புத்தக விழா நடக்கையில் அங்கு தமிழினி விரிக்கும் கடையில் கிடைக்கும். புத்தகக் கடைகளிலோ நூல்நிலையங்களிலோ தென்படாது.


தமிழினி நூல் வெளியீட்டு நிகழ்வில் இந்த நூல் சார்ந்த சில பகுதிகள்.



சிறுகதை என்பது சம்பவமோ வாழ்க்கை விள்ளலோ அனுபவப் பகிர்வோ நினைவோட்டமோ சார்ந்த நீதிகளோ மட்டும் அல்ல. நாவலைப் போலவே அவை முழுமையான அனுபவத்தை, அதிலிருந்து எழும் மேலதிகமானப் பொருளை உணர்வுகளை வழங்க முற்படவேண்டியது அவசியம். சிறுகதையாகச் சொல்லப்பட்டவை வேறு சிறு பெரு வடிவங்களில் திறம்பட அளிக்க முடியாதவை, அவசியமில்லாதவை.

இத்தொகுப்பில் ஒன்பது சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. போர்ச்சுகல் நாட்டில் இரண்டு நாட்களில் நடப்பவற்றை இருபது பக்கங்களில் சொல்லும் கதையில் தொடங்கி, அரங்கம் அமெரிக்கா என இருபதாண்டுகளில் நடப்பவற்றை இரண்டு மூன்று பக்கங்களில் சொல்லும் கதையில் முடிகிறது. கேட்காத இளையராஜா கச்சேரிப் பின்னனியில், கேட்கும் கர்நாடக சங்கீதக் கச்சேரிப் பின்னனியில், நகரத்தில், அரங்கத்தில் என்று வகைந்து, பிரெஞ்சு நாட்டு பாண்ட்-அவன் சிற்றூரில் 1888இல் ஓவியர் பவுல் கவ்கின் பெற்ற தரிசனமும் வரலாற்றுப் புனைவாக இத்தொகுப்பினுள் உள்ளன. நடுவில் பேயே வராத ஒரு பேய்க் கதையும் உண்டு.


உள்ளடக்கம்

1. குரு நிந்தனை
2. முத்தம்மா
3. பாட்டி தந்த பரிசு
4. தரிசனம்
5. ராமா நீ சமான மெவரு
6. வெந்த உருளைக்கிழங்கு
7. கஸ்டமரே கடவுள் – சிறுநாடகம்
8. இசையா இரவு
9. எட்டணாவில் உலக ஞானம்


Enlightened in Eight-Annas என்கிற தலைப்பில் இக்கதைகள் ஆங்கில வடிவத்திலும் வெளிவந்துள்ளன. இதற்கான தனிப்பக்கத்தில் விபரங்களை அளிக்கிறேன்.


கதைகளை வாசித்த பிறகு வாசகக் கருத்துகளை என்னுடன் பகிர்ந்தால் மகிழ்வேன்.


ettanavil ulaga gnanam wrapper அட்டை வடிவமைப்பு: அருண் நரசிம்மன்