சிறுகதைகள் · தமிழினி வெளியீடு, 2024 · விலை ₹200 · என் முதல் சிறுகதைத் தொகுப்பு.

நூலைப் பற்றி

சிறுகதை என்பது சம்பவமோ வாழ்க்கை விள்ளலோ அனுபவப் பகிர்வோ நினைவோட்டமோ சார்ந்த நீதிகளோ மட்டும் அல்ல. நாவலைப் போலவே அவை முழுமையான அனுபவத்தை, அதிலிருந்து எழும் மேலதிகமானப் பொருளை உணர்வுகளை வழங்க முற்படவேண்டியது அவசியம். சிறுகதையாகச் சொல்லப்பட்டவை வேறு சிறு பெரு வடிவங்களில் திறம்பட அளிக்க முடியாதவை, அவசியமில்லாதவை.

இத்தொகுப்பில் ஒன்பது சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. போர்ச்சுகல் நாட்டில் இரண்டு நாட்களில் நடப்பவற்றை இருபது பக்கங்களில் சொல்லும் கதையில் தொடங்கி, அரங்கம் அமெரிக்கா என இருபதாண்டுகளில் நடப்பவற்றை இரண்டு மூன்று பக்கங்களில் சொல்லும் கதையில் முடிகிறது. கேட்காத இளையராஜா கச்சேரிப் பின்னனியில், கேட்கும் கர்நாடக சங்கீதக் கச்சேரிப் பின்னனியில், நகரத்தில், அரங்கத்தில் என்று வகைந்து, பிரெஞ்சு நாட்டு பாண்ட்-அவன் சிற்றூரில் 1888இல் ஓவியர் பவுல் கவ்கின் பெற்ற தரிசனமும் வரலாற்றுப் புனைவாக இத்தொகுப்பினுள் உள்ளன. நடுவில் பேயே வராத ஒரு பேய்க் கதையும் உண்டு.

கதைகளை வாசித்த பிறகு வாசகக் கருத்துகளை என்னுடன் பகிர்ந்தால் மகிழ்வேன்.

உள்ளடக்கம்

  1. குரு நிந்தனை
  2. முத்தம்மா
  3. பாட்டி தந்த பரிசு
  4. தரிசனம்
  5. ராமா நீ சமான மெவரு
  6. வெந்த உருளைக்கிழங்கு
  7. கஸ்டமரே கடவுள் – சிறுநாடகம்
  8. இசையா இரவு
  9. எட்டணாவில் உலக ஞானம்

வாங்க

  • தமிழினி பதிப்பகம்: +91 93442 90920 · +91 86672 55103 · tamilinibooks AT gmail DOT com
  • ஆன்லைனில்: உடுமலை · பனுவல் தளங்களில் நூலின் பெயரில் தேடுக.
  • புத்தகக் காட்சிகளில்: தமிழினி அரங்கில் கிடைக்கும். புத்தகக் கடைகளிலோ நூலகங்களிலோ தென்படாது.
  • அமெரிக்கா, கனடா: உங்கள் பிரதியைத் தருவிக்க என்னைத் தொடர்புகொள்ளுங்கள். வங்கிப் பரிமாற்றம் அல்லது PayPal வழியாக வாங்குவதற்கான விபரங்கள் வழங்கப்படும்.

மதிப்புரைகள், வாசகர் கருத்துகள்

உரைகள், நிகழ்வுகள், செய்திகள்

தமிழினி நூல் வெளியீட்டு நிகழ்வில் இந்த நூல் சார்ந்த சில பகுதிகள்:

அட்டை

அட்டை வடிவமைப்பு: அருண் நரசிம்மன்