பணியில் நான் ஒரு பேராசிரியர். பொழுதில் அறிவியல் இசை இலக்கியத் துறைகளில் ஆர்வமுள்ளவன். பொதுவில் நல்ல மனிதன் ஆக (இயங்க) முயல்பவன்.
தமிழல் சில அறிவியல் நூல்கள் எழுதியுள்ளேன். அமெரிக்க தேசி என் முதல் தமிழ் நாவல். அச்சுவை பெறினும்… இரண்டாவது. இல்புறம் மூன்றாவது. எட்டணாவில் உலக ஞானம் என் முதல் சிறுகதைத் தொகுப்பு. ஆங்கிலத்திலும் தமிழிலும் (தி ஹிந்து, தினமலர், அம்ருதா, சொல்வனம் போன்ற) ஊடகங்களில் அறிவியல் கட்டுரைகள், கர்நாடக இசை விமர்சனங்கள் எழுதியுள்ளேன். பொறியியல் இயற்பியல் துறைகளில் பாடபுத்தகமும் சில பல ஆய்வுக்கட்டுரைகளும் வழங்கியுள்ளேன். புகைப்படக் கலை அண்மைய ஆர்வம்.
மற்றபடி விஞ்ஞானி வேஷ்டி கட்டிக்கொள்ளலாமா என்பது போன்ற உபத்திரவமில்லாத சிந்தனைகளுடன் பருத்தியாடை மதிபேசியுடன் தெருவோரமாக நடந்து செல்லும் சென்னைவாசி. ஸ்ரீரங்க விசுவாசி.
