
நாவல் · தமிழினி வெளியீடு, 2016 · என் இரண்டாவது தமிழ் நாவல்.
நூலைப் பற்றி
தத்தமது சதிபதிகளுடன் அமெரிக்கா பெங்களூர் என்று இல்லறம் பேணும் இருவர் மீண்டும் காதலர்களாய்த் தாங்கள் வளர்ந்த சிற்றூரில் இரு தினங்கள் சந்தித்துக்கொள்ள நேர்ந்தால்? இல்புறக் காதலின் அச்சுவையைப் பெறுவதற்கான விலையை இல்லற அன்பும் அறனும் பொறுக்க வல்லதா?
இதுதான் புத்தகப் பின் அட்டைக்கு எழுதிக் கொடுத்துள்ள சாரம்.
மேலும்… என்றால், இது காதல் கதை. காதலைப் பற்றிய கதை. காதலிப்பதும் காதலில் இருப்பதும் ஒன்றா என்பது பற்றிய கதை. காதலில் இருப்பதும் காதலித்து இருப்பதும் ஒன்றா என்பது பற்றிய கதை. காதலித்து இருப்பதும் காதலித்திருப்பதும் ஒன்றா என்பது பற்றிய கதை. மண்ணில் இந்தக் காதல் இன்றி யாருக்கோ வாழ்தல் கூடலாம், அதில் யாருக்கே காதல் கணங்கள் கூடும்?
நாவலின் தலைப்பு, பாசுரத்தில் சுட்டது. அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமாநகருளானே. உள்ளடக்கம் வாழ்க்கையில் சுட்டது.
- நாவல் அறிமுகப் பதிவு: அச்சுவை பெறினும்…
- நாவலின் ஒரு பகுதி: தொல்ஸ்தோயின் காதல்
வாசகர்கள் வாசிப்பனுபவத்தை (வாசித்தபின்) வழங்கினால் மகிழ்வேன்.
வாங்க
- தமிழினி பதிப்பகம்: +91 93442 90920 · +91 86672 55103 · tamilinibooks AT gmail DOT com
- ஆன்லைனில்: உடுமலை
- புத்தகக் காட்சிகளில்: தமிழினி அரங்கில் கிடைக்கும். புத்தகக் கடைகளிலோ நூலகங்களிலோ தென்படாது.
- அமெரிக்கா, கனடா: உங்கள் பிரதியைத் தருவிக்க என்னைத் தொடர்புகொள்ளுங்கள். வங்கிப் பரிமாற்றம் அல்லது PayPal வழியாக வாங்குவதற்கான விபரங்கள் வழங்கப்படும்.
மதிப்புரைகள், வாசகர் கருத்துகள்
- கோகுல் பிரசாத் விமர்சனம்
- வாசகர் கடிதங்கள்: வெங்கட்ரமணன் · பெங்களூர் வாசகர் · சங்கீதா
அட்டை

முன் அட்டை ஓவியம் அடியேன் வரைந்ததே. பின் அட்டை ஓவியம், இல்லாள் + இவன் கூட்டு முயற்சி.
