ஐஐடி முத்தமிழ் மன்றம் உரை

Standard

எச்சரிக்கை செய்து அனுப்பிவிடுவார்கள் என்றுதான் நினைத்திருந்தேன்.

“என்ன சார் இப்படி செஞ்சுட்டீங்க? எங்ககிட்டலாம் ஒரு வார்த்த கேட்டுருந்தீங்கன்னா இப்படியெல்லாம் நடக்காம… போனாப்போறது, மொத வாட்டியாப்போச்சு… அதுனால…” என்கிற வகையில்.

பின், திடுதிப்பென்று நேற்று “ஐஐடி முத்தமிழ் மன்றம்” ஏற்பாடு செய்திருந்த விழாவில் எனக்கு சால்வை போட்டு அதற்கான ஏற்புரை வழங்கச்சொன்னால்?

கூடவே பதிப்பாளரையும் அழைத்து வரவேண்டும் என்றார்கள். ஃபோன் நம்பரைக் கொடுத்துவிட்டு ஒதுங்கிவிட்டேன்.

“ஏங்க, அவருதான் ஏதோ ஆர்வக்கோளறுல இப்படி செஞ்சுட்டார்னா, நீங்க தீவிரமான தமிழ் பதிப்பாளர்தானே. அப்படி இப்படி ரெண்டு மூணு வருஷம் இழுத்தடிச்சு, ஏண்டாப்பா தமிழ்ல எழுதத்தொடங்கினோம்ன்னு அவரே ஜகா வாங்கறாமாதிரி செஞ்சிருக்கலாம்தானே. அதவுட்டுப்போட்டு, ஒடனே அத்த வாங்கி படிச்சுபார்த்து திருத்தி பொஸ்தகமா கொண்டுவந்துட்டீங்களாமே…வாங்க ஒங்களுக்கும் இருக்கு, எங்க சால்வை, கேடயம்… இனிமேயாவது தமிழ் எழுத்தாளர்கள வெக்கற எடத்துல வெக்கக் கத்துகிடுங்க…”

இப்படித்தான் அழைப்பு இருந்திருக்கவேண்டும்.

“இப்ப இங்க என்ன நடக்கும்?” என்கிற மருட்சியுடன் பதிப்பாளாரும் ஆஜர்.

சால்வை போர்த்துகையில், ஹாஸ்டல் அறையில் சீனியர்கள் போர்வை போடுவதே ஞாபகத்தில். பத்துநிமிடம் என்றுதான் பேச்சு. பயத்தில் நாற்பது நிமிடம் ‘ஆத்து ஆத்தென்று’ ஆத்தினேன். கேளுங்களேன்.

பாகம் 1 (23 நிமிடங்கள்): https://www.youtube.com/watch?v=QRYfByXxEf0

பாகம் 2 (20 நிமிடங்கள்): https://www.youtube.com/watch?v=E6bLrvI4zhs

“ஐஐடி-ல தமிழ் மன்றம்ன்னு ஒண்ணு இருக்கா சார்? காமெடி கீமெடி பண்ணலயே?” என்றபடி ஆஜரானவர் ரிப்போர்டராம். தினமலர் பேப்பரில் இன்று, என்னை ஓரளவு அடையாளம் தெரியும் வகையில் படத்துடன், செய்தி வெளியிட்டுள்ளனர்.

தினமலர் செய்தி

வெளியே தலைகாட்டாமல் அடுத்ததாய் இலக்கியபேதியாக எதையாவது செய்யலாமா என்றிறுக்கிறேன். தமிழில் நல்லது நடப்பதுதான் கடினம்.

அவரவ விதிவழி யடையநின் றனரே.